தமிழ் சினிமா
இன்றும் தமிழ்நாட்டில் பிரபல கவிஞ ராக
விளங்கி வரும் கண்ணதாசன், அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான்.
மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி
போட்டவர், சினிமாத் துறையில் முழு
மூச்சுடன் இறங்கினார். சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் ‘மாலை யிட்ட மங்கை’ நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து
பல படங்கள். சிவகங்கைச் சீமை,கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள். ‘இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம்
கொடுப்பவன் முதலாளி, சம்பளம் வாங்குபவன் தொழிலாளி. இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம்
ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்!’ என்றார் கண்ணதாசன்.இந்து
மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின்
செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும்
மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.
No comments:
Post a Comment