Tuesday, 9 January 2018

Dr.A.P.J.Abdul kalam






                               Dr. A.P.J. Abdul Kalam 






    பிறப்பு:

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்.

இளமைப் பருவம்:

அப்துல் கலாம், இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தனது  பள்ளிப்படிப்பை தொடங்கினார். ஆனால் இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன்னுடைய குடும்பத்திற்காக வேலைக்குச் சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார்.

கல்லூரி வாழ்க்கை:

தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

விஞ்ஞானியாக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:    



1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.  இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.  1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.

குடியரசுத் தலைவராக ஏ.பி.ஜே அப்துல் கலாம்:  



2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.

மரணம்:

அப்துல் கலாம் அவர்கள் ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து மறித்தார்.

இறுதி மரியாதை:

இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சிலம்பு


சிலப்பதிகாரம் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு:


சங்க கால புலவர் மாமூலனார் கி.மு 4 ஆம் நாற்றாண்டில் மகத்தை ஆண்ட நந்த வம்சம் பற்றியும் ,பிறகு அவர்களை போரில் வென்ற மௌரியரின் தமிழக படையெடுப்பு பற்றியும் பாடியுள்ளார் . அப்போரில் பல தமிழ் சிற்றரசர்கள் பங்கெடுத்தாலும் சோழன் இளஞ்சேட்செண்ணியே மௌரியர்ளை போரில் வென்று பெரும் பேர் பெற்றதாக சங்க கால பாடல்கள் கூறுகிறது. மாமூலனார் சேர அரசர்கள் உதியஞ்சேரலாதனையும் பிறகு அரசாண்ட இமயம் நெடும் சேரலாதனையும் பாடியுள்ளார் . போரில் நெடுஞ்சேரலாதனை வென்ற கரிகாலனையும் பாடியுள்ளார். கரிகாலனை விட சில ஆண்டுகள் முதியோனாக பாண்டியன் நெடுஞ்செழியனும் கரிகாலனை விட சிறியவனாக சேரன் செங்குட்டுவனும் வாழ்ந்ததாக சங்க கால பாடல்கள் மூலம் தெரிகிறது. இவர்கள் மூவரைப்பற்றி கூறுவதாலும் சிலப்பதிகாரம் உருவான காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டின் மத்தியில் எழுதப்பட்டது என்பது மிகச்சரியாக பொருந்தி வருகிறது.

வரந்தரு காதையில்,

"மறத்துறை முடித்த வாய்வாள் தானையொரு பொங்கரும் பரப்பின் கடற்பிறக்கு ஓட்டி கங்கைப் பேர்யாற்றுக்கரை போகிய செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று"

என்று சிலப்பதிகார கதை செங்குட்டுவன் கதையோடு முற்றிற்று என்று கூறிய பின்னர் நூற் கட்டுறையில்

"மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்"

என சொல்வது பொருளற்றது.எனவே இவையிரண்டும் வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்டவைகள்.

பிள்ளைத் தமிழ்


              புலவர்கள் தாம் விரும்பும் தெய்வத்தையோ, அரசனையோ, தலைவனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாகப் பாவித்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் எனப்படும்.

              இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்களுக்கு மொத்தம் 100 பாடல்கள் பாடப்படும்.

               இவ்விலக்கியம் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். வெண்பாப் பாட்டியல் (செய்யுளியல் 7ஆவது பாடலின்) மூலம் காப்பு, தால், செங்கீரை, சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர் எனப் பத்துப் பருவங்களை உடையது பிள்ளைத் தமிழ் என்பதை அறிய முடிகிறது.

                இதில் முதல் ஏழு பருவங்கள் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவாகும். கடைசி மூன்று பருவங்களான சிறுபறை, சிற்றில், சிறுதேர் ஆகியன ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன. இம்மூன்று பருவங்களுக்குப் பதிலாக, கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்களைப் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குச் சேர்த்துக் கூறுவது மரபு.

 காப்புப் பருவம்


பாட்டுடைத் தலைவனை    அல்லது தலைவியைக் காத்தருளுமாறு இறைவனை    வேண்டிப்பாடுவது. இது குழந்தையின் மூன்றாம் மாதத்திற்குரியது.

தாலப் பருவம்


 தால் - நாக்கு, குழந்தையின் ஐந்தாம் மாதத்திற்குரியது. குழந்தையை நாவசைத்து ஒலி எழுப்புமாறு வேண்டுதல்.

 செங்கீரைப் பருவம்


ஒரு காலை மடித்து ஒரு காலை நீட்டி இரு கைகளையும் ஊன்றிக் கீரை அசைவது போலக் குழந்தையை, செங்கீரை ஆடுமாறு வேண்டுவது. இது   குழந்தையின் 7ஆம் மாத்திற்குரியது.

சப்பாணி


குழந்தையின் 9ஆம் மாதத்திற்குரியது. இது குழந்தையை இரு கைகளையும் கொட்டுமாறு வேண்டுதல்.

முத்தம்


இப்பருவம் 11ஆம் மாதத்திற்குரியது. குழந்தையை முத்தம் கொடுக்கும்படியாகத் தாயும் பிறரும் வேண்டுவது.

வருகை அல்லது வாரானை


குழந்தையின் 13ஆம் மாதத்தில் குழந்தையைத் தளர்நடையிட்டு வருக என அழைப்பது.

அம்புலி


15ஆம் மாதத்திற்குரிய இப்பருவத்தில்    நிலவைப் பாட்டுடைத் தலைவனுடன் விளையாட வரும்படி அழைப்பது. இப்பருவத்தைச் சாம, பேத, தான, தண்டம் என்னும் நான்கு வழிகளில் அமைத்துப் பாடுவர். இப்பருவம் பாடுவதற்குக் கடினமான பருவம் என்பர்.

சிற்றில்


17ஆம் மாதத்திற்குரியதான இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

சிறுபறை


19ஆம் மாதத்திற்குரிய இப்பருவம் குழந்தை சிறுபறை முழக்கி விளையாடுதலைக் குறிக்கும்.

சிறுதேர்


21ஆம் மாதத்திற்குரிய இதில் குழந்தை சிறுதேர் உருட்டி விளையாடுதல் குறிப்பிடப்படும்.

நீராடல்


குழந்தையை நீரில் குளிக்கும்படி வேண்டுதல்.

அம்மானை - கழங்கு


கழங்கினை மேலை வீசி ஆடும்படி வேண்டுதல்.

ஊசல்


ஊஞ்சலில் ஆடும்படி குழந்தையை வேண்டுதல்.

தமிழ் விடு தூது










செந்தமிழ்மொழியின் கண்ணுள்ள சிற்றிலக்கிய நூல்களுள் தூது என்பதும் ஒன்று. இது ஒரு தலைவன்மேற் காதல் கொண்ட தலைவி தன் காதல் நோயின் துயரத்தைக் காதலனுக்கு எடுத்துக் கூறி “லை வாங்கி வா” “தூது சொல்லி வா” என்று உயர்திணைப் பொருள்களையேனும் அஃறிணைப் பொருள்களையேனும் விடுத்ததாகப் பொருளமைத்துப் புலவர்களாற் பாடப்படுவதொன்றாம். காதலனும் காதலிக்குத் தூது விடுப்பதும் உண்டு எனினும் காதலி விடுத்த தூது நூல்களே பெரும்பாலும் காணப்படுகின்றன. ‘விறலிவிடு தூது’ என்பதே ஆடவன் விடுத்த தூது நூலாகத் தோன்றுகிறது. அதுவும் காதற் பொருள் கூறாது புலவன் தான் பரத்தையருடன் கூடிக் கேடடைந்த செய்தியை விறலிபாற் கூறி மனைவியின் ஊடல் நீக்குமாறு விடுத்ததாகப் பொருளமைந்துள்ளது. இதுபோல ஆடவன் விடுத்த தூதுப் பொருள் அமைந்த நூல் காண்பதரிது. மங்கையர் தம் காதல் கூறி விடுத்த பொருளமைந்த நூல்களே எங்கணும் காணப்படுவனவாம்.

சங்க இலக்கியங்கள்


சங்க இலக்கியங்கள்


சங்க இலக்கியங்கள் எனப்படுவது = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர்.

பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா
ஐவகை பாவும் பொருள்நெறி மரபின்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்
மகாபாரதம் தமிழ்ப் படுத்தும்
தொகுக்கப் படுவது மேற்கணக் காகும்

- பன்னிரு பாட்டியல்
தொகை நூல்கள் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார்.
சங்க இலக்கியங்களை சான்றோர் செய்யுட்கள் எனக் கூறியவர் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசியர் ஆவார்.

நற்றிணை


நற்றிணை

   இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றிணையை தொகுத்தவர்  பெயர் தெரியவில்லை.
நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.
தொண்டி என்பது சேர நாட்டு துறைமுகம். மாந்தை என்பது சேர நாட்டு கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள் நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.
குறுந்தொகை
இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பிதவர் பெயர் தெரியவில்லை.
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகனை பற்றியதாகும்.
குறுந்தொகையிலிருந்து  அறியும் செய்திகள் .
அதியமானின் தலைநகரம் தகடூர்.
கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரி.
திருக்கோவிலூரையும் முள்ளூரையும் ஆட்சி செய்த மன்னன் மலையமான் திருமுடிக்காரி.
கரிகாலனுக்கு திருமாவளவன் என்ற பெயரும் உண்டு.
கரிகாலனின் மகள் ஆதி மந்தி.
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் இறையனார்.

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்

                                      திரு. வி.கலியாணசுந்தரனார் 

       திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 261883 - செப்டம்பர் 171953[1]) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர்தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

            காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
            கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார். இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.

muththollayiram

முத்தொள்ளாயிரம்

     இந்நூல் அகமும் புறமும் பற்றிய பாடல்களைக் கொண்டதாகும். மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிய தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் இயற்றப்பட்டன. அதனால் இது முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இவற்றில் தற்சமயம் கிடைக்கப்பெற்றவை 109 பாடல்கள் மட்டுமே. அவை கடவுள் வாழ்த்து - 1, சேரனை குறிக்கும் பாடல்கள் - 22, சோழனைக் குறிக்கும் பாடல்கள் - 29, பாண்டியனைக் குறிக்கும் பாடல்கள் - 57 ஆகும். இப்பாடல்களை இயற்றிய புலவர்களின் பெயர்களும் காலமும் அறியப்படவில்லை.

கடவுள்வாழ்த்து

மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்றயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு! 1

சேரன்

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே-ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமான்தேர்க் கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு. 2

வாமான்தேர்க் கோதையை மான்தேர்மேற் கண்டவர்
மாமையே அன்றோ இழப்பது-மாமையின்
பன்னூறு கோடி பழுதோ என் மேனியில்
பொன்னூறி யன்ன பசப்பு. 3

கடல்தானைக் கோதையைக் காண்கொடாள் வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை-அடைக்குமேல்
ஆயிழையாய்! என்னை அவன்மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான். 4

வரைபொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரைபொரு வேல் மாந்தைக் கோவே!-நிரை வளையார்
தங்கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார்
செங்கோலன் அல்லன் என. 5

புன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரும் நல்நாடன்-என்னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு. 6

கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை யாக
நெடுங்கடை நின்றதுகொல் தோழி!-நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையை
காணிய சென்றவென் நெஞ்சு. 7

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன்-நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வருஞ்செல்லும் பேருமென் நெஞ்சு. 8

வருக குடநாடன் வஞ்சிக்கோ மான் என்று
அருகலர் எல்லாம் அறிய-ஒருகலாம்
உண்டா யிருக்கஅவ் ஒண்தொடியாள் மற்றவனைக்
கண்டாள் ஒழிந்தாள் கலாம். 9