Tuesday, 8 November 2016

jayanthi: பதினெண் கீழ்க்கணக்கு

jayanthi: பதினெண் கீழ்க்கணக்கு: சிறுபஞ்சமூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான   சிறுபஞ்சமூலம்   நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது . ஒவ்...


சிறுபஞ்சமூலம்

பதினெண் கீழ்க்கணக்குநூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலம் நான்கு அடிகளால் அமைந்த நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் அது நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து விடயங்களை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப் பாடங்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை. எனினும், இது சிறுபஞ்சமூலம் எனப்பெயர் பெற்றது. இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.

பதினெண் கீழ்க்கணக்கு

நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு

Sunday, 6 November 2016

தமிழிச்சி : கவிஞர் புவியரசு

தமிழிச்சி : கவிஞர் புவியரசு: விருது க ள் 2007-  ல்   சாகித்ய அகாடமி விருது  [ புரட்சிக்காரன் என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு பெற்றார்] . ·                மிர்தாதின் ...



விருதுள்

2007- ல் சாகித்ய அகாடமி விருது [புரட்சிக்காரன் என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு பெற்றார்] .
·              மிர்தாதின் புத்தகம் என்ற நூலுக்கு நல்லி திசை எட்டும் பரிசு.
·              தமிழ்ப்பேரறிஞர் -தேவாச்சி அம்மாள் அறக்கட்டளை விருது
·              முக்கூடல் - கவிதை தொகுதிக்கு தமிழக அரசின் முதல்பரிசு
·              கலைஞர் பொற்கிழி விருது -2008-ல் லட்சம் ரூபாய்
·              2010- ல் சாகித்ய அகாடமி விருது [இரண்டாவது முறையாக கையொப்பம் கவிதைத்தொகுதிக்கு பெற்றார் ]
வானம்பாடி கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவர் முக்கியமானவர்
இந்திரா -இந்தியா-75நந்தா [வரலாறு]
கார்மலின் - கொங்கனி நாவல்
மிர்தாதின் புத்தகம் - தத்துவம்

கவிஞர் கண்ணதாசன்

தமிழ் சினிமா 



இன்றும்  தமிழ்நாட்டில் பிரபல கவிஞ ராக விளங்கி வரும் கண்ணதாசன்அந்தக் காலத்தில் அதிகமாக எழுதியது கதைகள்தான். கவிதை இரண்டாம் பட்சம்தான். மாடர்ன் தியேட்டர்ஸில் இவர் கதைகள்தான் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி போட்டவர்சினிமாத் துறையில் முழு மூச்சுடன் இறங்கினார். சொந்தமாகப் படம் தயாரித்தார். முதல் படம் மாலை யிட்ட மங்கை’ நல்ல வெற்றி தந்தது. தொடர்ந்து பல படங்கள். சிவகங்கைச் சீமை,கவலையில்லாத மனிதன் எல்லாம் தோல்விகள். ‘இது ஒரு தொழிலே இல்லை. மற்ற தொழிலில் சம்பளம் கொடுப்பவன் முதலாளிசம்பளம் வாங்குபவன் தொழிலாளி. இதில் நேர்மாறு. இந்த அவல நிலைக்குக் காரணம் ஜனங்கள் தான். நட்சத்திர மோகம் குறைந்தால்தான் சினிமாத் தொழில் உருப்படும்!’ என்றார் கண்ணதாசன்.இந்து மதத்தில் பிறந்தவராயினும் மதவேற்றுமை கருதாமல் ஏசுகாவியம் பாடியவர். கம்பரின் செய்யுளிலும்பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர்களை மானசீகக் குருவாகக் கொண்டவர்.