Thursday, 18 January 2018

மணிமேகலை


ஐம்பெருங்காப்பியம்: மணிமேகலை



 
 

 




இயற்றியவர் : சீத்தலைச் சாத்தனார்

சிலம்பின் தொடர்ச்சியாக இக்காப்பியம் அமைவதால், சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் இரட்டைக் காப்பியம் என்பர்.

பெண்ணின் பெயரில் அமைந்த முதற்காப்பியம் இதுவாகும்.

இக்காப்பியத்தின் தலைவி, மணி மேகலை; சிலப்பதிகாரத்தின் கோவலன் , மாதவி என்பவர்களின் மகளாவாள். மணிமேகலை பிறந்த போது ஆயிரம் கணிகையர் கூடி மகிழ அக்குழந்தைக்குக் கோவலன், தன் குலதெய்வம் மணிமேகலா தெய்வத்தின் பெயரைச் சூட்டினான். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள்.

ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை அவள்  அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முன்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை  ‘அமுதசுரபி’ என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவை பூம்புகாரிலுள்ள ஏழை எளியோருக்கு வழங்கினாள்.

உதயகுமரன் தரும் தொல்லைகளிலி ருந்து தப்ப, அவள் காயசண்டிகை எனும் பெண்வடிவினை எடுக்கிறாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமாரன் கொல்லப்படுகிறான். இளவரசனைக் கொன்றபழி, மணிமேகலை மீது விழுகிறது. அவள் சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறாள். மகனைப் பறிகொடுத்த அரசி, மணிமேகலையைப் பல்வேறுவகையில் கொடுமைப்படுத்துகிறாள். வரவலிமையால் மணிமேகலை அவற்றிலிருந்து மீள்கிறாள்.

சிறைச்சாலையிலும் வெளிஇடங்களிலும் மணிமேகலை அமுதசுரபியால் அனைவருக்கும் உணவிடுகிறாள். மணிமேகலை காஞ்சி சென்று அறவண அடிகளிடம் ஆசி பெற்று, பௌத்த மதக் கொள்கைகளைப் பரப்புகிறாள்.

மணிமேகலைக் காப்பியத்தின் தனிச்சிறப்புகள்

இன்று மனித உரிமைகள் பற்றி எங்கும் பேசுகிறோம். இருக்கஇடம், உண்ண உணவு, உடுத்த உடை இவை மூன்றையும் மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகிறது.

மணிமேகலை பற்றி முனைவர் வ.சுப.மாணிக்கம், “பரத்தமை ஒழிப்போடு மதுவொழிப்பு, சிறையொழிப்பு, சாதியொழிப்பு என்றனைய சமுதாயச் சீர்த்திருத்தங்களின் களஞ்சியம் இக்காவியம்” என்பார்.

பசியை நோயாகவும், பாவியாகவும் மணிமேகலைக் காப்பியம் விளக்குகிறது.

மணிமேகலையின் கதாப்பாத்திரம்

கோவலன் மாதவி தம்பதியரின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாக வேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின் தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தும், மணிமேகலை அனைத்துத் தடைக்கற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தாள்.

பிறகுதன் விருப்பப்படியே புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்குப் பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.

No comments:

Post a Comment